திடீர் உண்ணாவிரதம், திடீர் பஸ் கட்டணக் குறைப்பு என கருணாநிதி திடீர் நாயகனாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம் திடீர் என ஒரு விசிடியைப் பார்த்து திடீர் என தனி ஈழத்துக்காக முழங்கிக் கொண்டிருக்கிற ஜெயலலிதா. நேற்று ஏதோ ஒரு மண்டையைப் பிளக்கிற மத்தியான வெயிலில் நாங்கள் ஜெயித்தால் இலங்கையின் மேல் படையெடுத்துப் போய் தனி ஈழம் அமைப்பேன் என்று கத்திக் கொண்டிருந்தார்.
அவருக்கு சில கேள்விகள்.
உங்களுக்கு வாக்களித்தால் யார் பிரதமர் என்பதை சொல்லமுடியுமா?
நீங்கள் இதுவரையிலும் அடையாளம் காட்டாத பிரதமரை மிரட்டி, இலங்கையின் மேல் படையெடுத்துப் போய் தனி ஈழம் அமைப்பேன் என்கிறீர்களே. அப்படி அமைத்தால் அந்த தனி ஈழத்திற்கு யார் தலைவர்? எஸ்.எஸ் சந்திரனா? பிரபாகரனா?
(எதற்கு கேட்கிறேன் என்றால், எஸ்.எஸ்.சந்திரனை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிவிடலாம். ஆனால் பிரபாகரனை அப்படி நினைத்த மாத்திரத்தில் நீங்கள் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற முடியாது)
2 comments:
அது மட்டுமல்ல.
எஸ்.எஸ்.. காலில் விழ கூட ரெடியாயிருப்பார்.
விழாவிட்டால் எப்படி..??
நடிகர் ஐ.எஸ்.ஆரின் மகனா..?? இப்போதுதான் முகிலின் வலையில் தங்களின் பின்னூட்டத்தில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி செல்வா.
Post a Comment