Friday, May 1, 2009

ஜெயலலிதாவின் அருகில் பெட்டைகளாக, பேடிகளாக கம்யுனிஸ்டுகளும், வை.கோவும் - சுதர்சனம்

இன்றைக்கு திருச்சியில் தி.மு.க கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. முதன் முறையாக காங்கிரஸ் கட்சியின் சுதர்சனம் மேடையில் பேசியதைப் பார்த்தேன். நறுக்கென்று பேசாமல் கொஞ்சம் வழ வழா கொழ கொழாவாகத்தான் பேசினார். ஆனால் அவர் பேசிய ஒரு பாயிண்ட் எனக்குப் பிடித்திருந்தது.

”சேது சமுத்திரம் திட்டம் துவங்கிய போது அது என்னால்தான் நடந்தது என்றார் வை.கோ. எங்களால்தான் நடந்தது என்றார்கள் கம்யுனிஸ்டு தோழர்கள். ஆனால் அவர்களை அருகில் வைத்துக் கொண்டே சேது சமுத்திர திட்டத்தை நிறுத்துவோம் என்பதை வலியுறுத்தி ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது அதை எதிர்த்துப் பேச முடியாமல் பெட்டைகளாகவும், பேடிகளாகவும் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்” என்றார்.

உண்மைதான்! நான் ஒரு காலத்தில் மிகவும் மதித்த வை.கோ.வும், இந்த தேர்தலுக்கு முன்பு வரை என்னை வசீகரித்த கம்யுனிஸ்டுகளும் ஜெயலலிதாவின் முன் பேடிகளாகவும் பெட்டைகளாகவும்தான் அமர்ந்திருந்தார்கள்.

2 comments:

shinemadurai said...

பெட்டை யார் என்பதை சொல்ல வேண்டியது இல்லை.
காங்கிரசும், திமுக வும், சுதர்சனமும் தான். குற்றுயுரும், குலையுருமாக தமிழ் மக்கள் ஈழத்தில் துடிக்கும் போது, சேதுவை முன்னிறுத்த முடியுமா?
ஈழத்தை கைப்பற்ற ராணுவத்தை அனுப்புவேன் என்று சொல்லும் ஜெயலலிதா தான் சுத்தமான வீர தமிழச்சி. சுதர்சனம் உள்ளிட்ட அனைவரும் பெட்டைகள் தான்.
சந்தேகமே இல்லை.

ISR Selvakumar said...

ஈழப் பிரச்சனையை முன்னிறுத்திதான் அம்மாவும், இந்த சும்மாக்களும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை.

தேர்தல் முடிந்தவுடன் அம்மா எல்லோரையும் கழற்றி விட்டுவிடுவார், இலங்கைப் பிரச்சனையையும் சேர்த்து.